உலகின் முன்னணி நிறுவனம் 'ரோல்ஸ் ராய்சுடன்' தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் ஒப்பந்தம் தமிழக அரசு தகவல்.

Published Date: September 5, 2023

CATEGORY: EVENTS & CONFERENCES

வளர்ந்து வரும் ஆழ்நிலை தொழில்நுட்பம் மீது கவனம் செலுத்துவதற்காக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மே 15-ந் தேதியன்று புத்தாய்வு மையமான தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வழிகாட்டுதலின் கீழ் அந்த துறையின் செயலாளர் குமரகுருபரன் தலைமையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் கையெழுத்திட்டு உள்ளது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் 'ரோல்ஸ் ராய்ஸ்' நிறுவனம் தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் அறிவு சார் பங்குதாரர் என்ற அடிப்படையில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் நீடித்த தன்மை கொண்ட வளர்ச்சிக்கு உதவும். குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கும்.

இந்தத் தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Media: DAILYTHANTHI